தண்ணீர் லாரிகளை பதிவு செய்வது கட்டாயம்: உயர்நீதிமன்றம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 09:20 pm
registration-of-water-trucks-is-mandatory-high-court-action

அனைத்து தண்ணீர் லாரிகளும், உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்ய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வீட்டு உபயோக குடிநீர் இணைப்பை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக எல்.சந்திரகுமாரை நீதிமன்றம் நியமித்தது. வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுக்கப்படும் விவரங்களை தாக்கல் செய்ய அரசு அவகாசம் கேட்டது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் வழக்கறிஞர் ஆணையருக்கு இவ்வழக்கு தொடர்பான உரிய விவரங்களை தரவும், சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close