11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: விரைவில் விசாரணை

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 11:01 am
11-mlas-to-disqualify-probe-soon

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றதையடுத்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு உடனே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close