இங்கேயும் சிசிடிவி கேமரா: நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 05:25 pm
bus-stations-depots-and-have-to-fit-cctv-cameras

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளையும், தவறுகளையும் கண்காணிக்க, தமிழகத்தில் அனைத்து பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என, அரசு போக்குவரத்து கழகத்தின் நிதியை இணை மேலாண் இயக்குனர் சுகுமார் தவறாக பயன்படுத்தி வருவதாக ஓய்வு பெற்ற முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மேலும் இந்த வழக்கில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் உயர்அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்களா என 4 மாதத்தில் விசாரணை நடத்தவும், உயர் அதிகாரிகளின் மனைவி, அவர் சார்ந்தவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ராஜேந்திரன் மனுவை 6 வாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close