வாக்குறுதி கொடுக்காதீர்கள்: அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 05:28 pm
neetexam-exemption-do-not-promise-judge-advice-to-political-parties

நீட் தேர்வில் விலக்கு பெறுகிறோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்துக்கொண்டே இருக்க வேண்டாம் என்றும், நீட் தேர்வில் விலக்கு பெறுவதாக இருந்தால் அதில் கவனத்தை முழுமையாக செலுத்துங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில், கல்வித்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளன. கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம் நீட் தேர்வை எதிர்ப்பதாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன், 9,11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் நேரடியாக 10,12 ஆம் வகுப்பு பாடங்களை நடத்துக்கிறார்கள். 9,11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாததால் நீட் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது என்றும் கூறினார்.

மேலும், அனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல பிற மாணவிகள் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுபற்றி அரசு விளக்கம் தர உத்தரவிட்டு இவ்வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close