100 வயது தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பு: நீதிபதிகள் வேதனை

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 09:56 pm
pension-denial-for-freedom-fighter-martyr-tormenting-judges

சுதந்திர போராட்ட தியாகி கலியனுக்கு ஓய்வூதியம் தர நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தியாகி கலியனுக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தியாகிகளுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் பெற்றுவரும், தேவகோட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கலியன் (100 வயது) மத்திய அரசின் ஓய்வூதியம் தரக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தியாகி கலியனுக்கு 2014  -ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது.

மேலும், பிரிட்டீஷ் அரசை எதிர்த்து போராடிய தியாகிக்கு ஓய்வூதியம் தர மறுப்பது மிகுந்த மனவேதனையை தருவதாகவும், சிறையில் கொடுமைகளை அனுபவித்த இவரை போன்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகளின் பிடிவாதத்தால் மனுதாரர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close