ஜெயலலிதா இல்லம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 03:31 pm
jayalalithaa-memorial-home-court-question-to-govt

ஜெயலலிதாவின்  வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி ஜெ.தீபா, தீபக் உள்ளிட்டோர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன?, ஜெயலலிதாவின் பெயரை நிலைக்கச் செய்ய பல வழிகள் உள்ளபோது அவரது இல்லத்தை நினைவிடமாக்க நினைப்பது ஏன்?" என கேள்விகள் எழுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close