அவதூறு வழக்கு: 15ஆம் தேதி வைகோ ஆஜராக உத்தரவு!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 11:21 am
defamation-case-vaiko-ordered-to-appear-on-july15

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வரும் 15ஆம் தேதி வைகோ ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி செய்வதாக அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். வைகோவின் இந்த கடிதத்தை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக இன்று சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 15ஆம் தேதி வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close