பரிசுப் பொருள் வழக்கு: அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 11:43 am
prize-case-minister-senkottaiyan-acquitted

பரிசுப்பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

1992ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன் பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடினார். அவருக்குப் பல பொருட்கள், காசோலைகள், வரைவோலைகள் பரிசாக வந்தன. அவருக்கு வந்த பரிசு பொருட்களுடைய மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும். முதலமைச்சருக்கு வரும் பரிசுத் தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நடைமுறையில், அவர் தன்னுடைய சொந்த வங்கி கணக்கில் சேர்ந்து கொண்டார். 

இது தொடர்பாக ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு மற்றும் செங்கோட்டையன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு இறந்துவிட்டதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 23 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என கூறி  அமைச்சர் செங்கோட்டையனை  வழக்கில் இருந்து விடுவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close