தமிழகத்தில் 3,200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 05:37 pm
napkin-vending-machine-has-been-installed-in-3-200-schools-in-tamil-nadu

தமிழகத்தில் 3,200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தவிடக்கோரி பெண் வழக்கறிஞர் ஆனந்தவள்ளி தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. 

அதில், ‘தமிழகத்தில் உள்ள 5,588 அரசுப்பள்ளிகளில் 3,200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகளில் நாப்கின்கள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாசிரியர் ஒருவரால் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2,388 பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் வைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தது.

அதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கை ஒத்திவைப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close