போலீசாரை மிரட்டினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்: நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 06:01 pm
suppress-the-iron-curtain-with-intimidation-of-the-police-court-action

சட்டப்படி செயல்படும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், மனஅழுத்தத்துடன் வேலை செய்யும் போலீசாரை நீதிமன்றம், உயர்அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையின்போது இவ்வாறு அறிவுறுத்திய நீதிமன்றம், "நேர்மையான போலீசாரா ஊக்கப்படுத்துவது, ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற இரண்டிலும் காவல்துறை மும்முரம் காட்ட வேண்டும்.

தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யும் காவல் அதிகாரிகளை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும்  இவ்வாறு மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

வழக்குப்பதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். தவறான நோக்கத்தில் வழக்கு தொடரும் வழக்காளர்களை  பொறுத்துக்கொள்ள முடியா என்றும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close