ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? :உயர்நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 06:38 pm
how-much-is-jayalalithaa-s-property-worth

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தற்போதைய வழிகாட்டுதல்படி எவ்வளவு? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், சொத்துகளை மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5 -ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க உத்தரவிடக் கோரி புகழேந்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா மீது வழக்குகளோ, அபராத நிலுவைத் தொகையோ எதுவும் இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்று தமிழக அரசு பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால் சொத்துகளின் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க கோரிக்கை விடுத்த தீபா, தீபக் ஆகியோர், ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தால் அதனை திரும்ப செலுத்தத் தயார் என தெரிவித்திருந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close