லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன தடை நீக்கம்!

  அனிதா   | Last Modified : 23 Jul, 2019 11:31 am
lokayukta-members-removed-nomination-ban

தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட ராஜாராம், ஆறுமுகம் ஆகிய இருவரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2  பேரின் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜாராம், ஆறுமுகம் ஆகியோர் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக தேர்வாகும் முன்பே தங்களது பழைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. 

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களாக ராஜாராம், ஆறுமுகம் பணியாற்றலாம் என கூறி லோக்ஆயுக்தா உறுப்பினர்களின் நியமன தடையை நீக்கி உத்தரவிட்டது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close