வாழ்நாள் சிறை - குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு : உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

  கிரிதரன்   | Last Modified : 24 Jul, 2019 08:28 pm
lifetime-prison-punishment-high-court-backs-to-president-decision

நெல்லையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் ஆகியோருக்கு, கொலை வழக்கு ஒன்றில் தூக்கு தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மூன்று பேரும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தனர்.

மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர், மூன்று பேரும் வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அனுமதி அளித்தார். குடியரசுத் தலைவரின் இந்த நிபந்தனையை எதிர்த்து,  மூன்று பேரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்போது, குற்றவாளி வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது, எனவே, அவர் அளிக்கும் மன்னிப்பை சாதகமாக கொண்டு, அவர் விதிக்கும் நிபந்தனைக்கு எதிராகவே வழக்கு தொடரக்கூடாது" என, நீதிபதி தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட  ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், நீதிபதியின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close