சதுரகிரியில் அன்னதானம் வழங்கக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2019 04:26 pm
not-to-be-givenannadanam-in-sathuragiri-court-order

சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அன்னதான மடங்களை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரியும், சதுரகிரி வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று நடைபெற்றது.

விசாரணையில், சதுரகிரிக்கு ஆடிஅமாவாசைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதனால் தனியார் அன்னதானம் வழங்க உத்தரவிடக்கூடாது என அரசு தரப்பு தெரிவித்தது.

அரசு தரப்பை விளக்கத்தை ஏற்று சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்கக்கூடாது என்றும் தாணிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே அன்னதானம் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடைகள் வைக்கப்பட்டால் அவற்றை அகற்றவும் உத்தரவிட்ட  நீதிமன்றம், இந்தாண்டு ஆடிஅமாவாசை திருவிழாவிற்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close