ஆணவக்கொலை: அரசின் அறிக்கை நம்பும்படியாக இல்லை!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 05:26 pm
the-tamil-nadu-government-s-statement-on-the-honour-killing-is-not-satisfied-the-madras-high-court-said

ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆணவக்கொலை தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. ஆணவக்கொலை குறித்து உச்சநீதிமன்ற ஆணை அடிப்படையில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தர அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தாக்கல் செய்த அரசின் அறிக்கையில், ஆணவக்கொலையை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்திருந்தது. இது நம்பத்தக்கதல்ல என்ற நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள 1300 காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு சாத்தியமில்லாதது என்று தெரிவித்தது.

ஆணவக்கொலையை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடவில்லை என்றும், தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்த உதவி காவல் துறை உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close