ஜெ.மரணத்தில் உண்மையை மறைக்க நினைக்கிறது அப்பல்லோ: ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2019 10:59 am
apollo-thinks-to-hide-the-truth-in-jayalalitha-death-commission

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடைகோரிய வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்  மனு தாக்கல் செய்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அந்த மனுவில், அப்போலோ மருத்துவமனை உள்நோக்கத்துடன், எதையோ மறைக்கும் நோக்கத்தில் விசாரணைக்கு தடை கோருவதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையை தொடர்ந்து நடந்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close