குடும்பக் கட்டுப்பாடு செய்த பின்பும் கர்ப்பம்... அரசிடம் ரூ. 20 லட்சம் இழப்பீடு கேட்கும் பெண்!

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2019 09:39 pm
family-planning-woman-pregnancy-court-order-to-respond

குடும்பக் கட்டுப்பாட்டு செய்த பெண் கர்ப்பம் தரித்தது குறித்த வழக்கில், தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த ஷிபா என்பவர் தொடர்ந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலர், நெல்லை ஆட்சியர், அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் பதில் தர உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகும் கர்ப்பம் தரித்ததால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துமனை மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும், குழந்தைக்கும் தரமான சிகிச்சை அளிக்கவும், ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் மனுதாரார் கோரிக்கை விடுத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close