இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சஸ்பெண்ட் உத்தரவை மறுஆய்வு செய்க: உயர்நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 11:48 am
hr-ce-commissioner-kavitha-case-hearing-in-madras-hc

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து, தான் சஸ்பெண்ட் செய்யப்படாதற்கு எதிராக, கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த மனுவின் மீதான விசாரணையில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close