அத்திவரதர் உற்சவத்தை நீட்டிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

  அனிதா   | Last Modified : 13 Aug, 2019 11:30 am
athivarathar-darshan

அத்திவரதர் உற்சவத்தை மேலும் 48 நாட்கள்  நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  

அத்திவரதர் உற்சவம் வரும் 17ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், உற்சவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் முறையீடு செய்தார். லட்சக்கணக்கான மக்கள் இன்னும் தரிசம் செய்யவில்லை என்பதால் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை கேட்டறிந்த  நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close