மது அருந்திய மாணவர்களுக்கு நீதிமன்றம் நூதன தண்டனை

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2019 06:31 pm
the-court-sentenced-a-critical-drinking-alcohol-to-students

மது அருந்திவிட்டு வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள், காமராஜர் நினைவில்லத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று, மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் மாணவர்கள் 8 பேர் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் வகுப்புக்கு சென்றதாக எழுந்த குற்றச்சாட்டில், அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

இதையடுத்து, வகுப்பறைக்குள் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி 8 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், மதுஅருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மது விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். காமராஜர் இல்லத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரின் அறிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close