நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகிறது? அறிக்கை தாக்க செய்ய உத்தரவு

  அனிதா   | Last Modified : 19 Aug, 2019 03:21 pm
on-what-technical-basis-is-the-water-level-court

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில் நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என்பது குறித்து  அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கண்மாய், குளங்கள் தூர்வாரும் பணிகளில் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், நீர்நிலைகள் தூர்வாரும் பணியை அரசு விதிப்படி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியும் நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீர்நிலைகள் எந்த தொழில் நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது குறித்து பொதுப்பணித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close