ஜெ., சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்கக்கூடாது?

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 06:03 pm
j-why-not-give-some-of-the-property-to-the-poor

மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்கக்கூடாது? என்று, ஜெயலலிதா சொத்து நிர்வாகம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று தீபா தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மேலும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு  நினைவு இல்லமாக மாற்றக்கூடாது. வேதம் இல்லம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் தீபா, தீபக் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வேதா இல்லத்தில் தீபா, தீபக்கை அனுமதிக்க அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close