நிலம் கையகப்படுத்தும் சட்டம்: தடையை நீக்கக்கோரி தமிழக அரசு மேல்முறையீடு

  அனிதா   | Last Modified : 02 Sep, 2019 04:42 pm
tamil-nadu-government-appeal-in-supreme-court

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடைவிதித்தது. இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுமார் ரூ.2லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், முக்கிய திட்டங்கள் பல முடங்கியிருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close