நளினியின் பரோலை நீட்டிக்க மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 12:24 pm
nalini-s-refusal-to-extend-parole

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலை 2 ஆவது முறையாக நீட்டிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வரும் 15 ஆம் தேதியுடன் பரோல் நீட்டிப்பு முடியவிருந்த நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை பரோலை நீட்டிக்க நளினி கேட்டிருந்தார். ஏற்கனவே 7 வாரம் பரோல் தரப்பட்டுள்ளதால் மேலும் 4 வாரம் பரோல் தர முடியாது என்று கூறி நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் வரும் 15 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பரோல் முடிகிறது.

தன் மகளின் திருமண ஏற்பாடுக்காக ஜூலை 25 ஆம் தேதி முதல்  நளினி பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close