ஆட்கொணர்வு மனு: வைகோ கோரிக்கை நிராகரிப்பு

  அனிதா   | Last Modified : 12 Sep, 2019 12:13 pm
vaiko-request-rejection

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய ஆட்கொணர்வு மனு மீது நாளை விசாரணை நடத்த வேண்டும் என்ற வைகோவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், செப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் பங்கேற்க பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டதாகவும், தற்போது, காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலால் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உச்ச நீதிபதி ரமணா அமர்வு முன்பு ஆட்கொணர்வு மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி ரமணா, அவசர வழக்காக விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என கூறி வைகோ தரப்பு கோரிக்கையை நிராகரித்தார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close