ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

  அனிதா   | Last Modified : 12 Sep, 2019 03:23 pm
hydro-carbon-project-central-government-to-respond

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நெடுவாசல், காரைக்குடி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லேப், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒற்றை உரிமம் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அனுமதி அளித்திருப்பது பெட்ரோலியம் மற்றம் இயற்கை வாயு சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து  8 வாரத்திற்குள்  மத்திய அரசு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்கள்  பதிலளிக்க உத்தரவிட்டது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close