வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம் பதில்

  அனிதா   | Last Modified : 17 Sep, 2019 02:57 pm
cannot-contest-another-party-symbol-election-commission

ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக, மதிமுக, கொ.ம.தே.க., ஐ.ஜே.கே., கட்சியை சேர்ந்த நான்கு பேரின் வெற்றியைப்செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளதாகவும், இதை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் எனவும் தெரிவித்தார். 

கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது நடைமுறை மோசடி ஆகாதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம் மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நவ.12ஆம் தேதிக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 

Newstm.in 

 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close