மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம்

  அனிதா   | Last Modified : 24 Sep, 2019 11:23 am
cannot-cancel-medical-counselling-court

மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் கலந்து கொண்டதால் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என 126 பேருக்கு எதிராக மதுரையை சேர்ந்த சோம்நாத் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று  நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மருத்துவ கலந்தாய்வு முழுமையாக நிறைவடைந்த நிலையில் அதை ரத்து செய்துவிட்டு புதிதாக கலந்தாய்வு நடத்துவது என்பது சாத்திமில்லை என்றும், புகாரில் முகாந்திரம் இல்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், இருமாநில இருப்பிட சான்று குறித்து பிரச்சனை வந்தால்  அரசே விசாரிக்கும்படி உத்தரவிட்டது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close