தஹில் ரமணி இடமாற்றத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

  அனிதா   | Last Modified : 25 Sep, 2019 02:47 pm
dismissed-on-petition-against-transfer-of-tahilramani

தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி இடமாற்றத்திற்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. மேகாலயாவுக்கு மாற்றப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமணி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தார்.  உச்ச நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி இடமாற்றத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close