பெட்ரோல் டேங்குகள்தான் அதிகமாக ஹெல்மெட் அணிகின்றன: உயர்நீதிமன்ற நீதிபதிகள் 

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 08:46 pm
petrol-tanks-are-the-most-expensive-helmet-high-court-judges

இருசக்கர வாகன ஓட்டிகளை விட பெட்ரோல் டேங்குகள்தான் அதிகமாக ஹெல்மெட் அணிகின்றன என்று, ஹெல்மெட் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கில், நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடரந்து, மெரினா சாலையில் ஹெல்மெட் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என்று தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் விதி பற்றி வலைதளங்களில் பேசுபவர்கள் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை பார்த்துக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உணவு டெலிவரி செய்யும் தொழிலில் இருப்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும்,  அவர்கள் தவறான வழியில்தான் அதிகளவில் வாகனத்தை ஓட்டுகின்றனர் என்றும் கூறிய நீதிபதிகள், ஹெல்மெட் சோதனையை தொடரந்து நடத்த உத்தரவிட்டு இவ்வழக்கை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.    

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close