ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை வழக்கு 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 08:06 pm
subasree-s-father-sues-for-rs-1-crore-compensation

பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுபஸ்ரீ தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

சுபஸ்ரீ தந்தை ரவி தாக்கல் செய்த மனுவில் மேலும், ‘சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் என் மகள் சுபஸ்ரீ உயிரிழந்தார். சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க விசாரிக்க வேண்டும். சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பேனர் விழுந்ததால் நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close