உலகத் தலைவர்கள் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்: நீதிபதி கருத்து

  அனிதா   | Last Modified : 10 Oct, 2019 12:11 pm
tamil-nadu-will-be-cleaned-up-visit-by-world-leaders-justice

உலகத்தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சுபஸ்ரீயின் தந்தை ரவி ரூ.1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகியுள்ளது என்றும், மற்ற உலகத்தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்தார். 

இதையடுத்து, பேனர் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அறிந்த பின் வழக்கு விசாரிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

Newstm.in
 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close