ராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுக கோரிக்கை நிராகரிப்பு

  அனிதா   | Last Modified : 14 Oct, 2019 09:50 pm
radhapuram-election-case-dmk-appeal-rejected

ராதாபுரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த திமுக வேட்பாளர் அப்பாவுவின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. 

ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த மனு மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், நெல்லை, ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு தொடர்பாக இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் அப்பாவு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

அப்பாவு கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் வழக்கு பட்டியலிட்ட பின்னரே விசாரிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்தபடி வரும் 23ஆம் தேதி விசாரிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக இன்று தெரிவித்தது. 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close