பேனர் விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 12:28 pm
banner-issue-high-court-question

மருமகளை வரவேற்பதற்காக பேனர் வைத்து மற்றொருவரின் மகளை கொன்று விட்டீர்கள் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில், அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக உடனடியாக ஜாமீன் கோருகிறீர்களா என கேள்வி எழுப்பியது. மேலும், ஒரு மருமகளை வரவேற்க பேனர் வைத்து மற்றொருவரின் மகளை கொன்றுவிட்டீர்கள் என கருத்து தெரிவித்த நீதிமன்றம் அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது. 

Newstm.in 

 

   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close