தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்: அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் 

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 04:02 pm
volunteers-do-not-place-banner-affidavit-filed-by-aiadmk

தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கட்சி நிகழ்ச்சிகளின்போது பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிமுக பிரமான பத்திரம் தாக்கல் செய்தது. பேனர் வைக்கமாட்டோம் என திமுக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுகவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி தந்தை ரவி தொடர்ந்த வழக்கில் நவம்பர் 22ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுபஸ்ரீ வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close