நீட் ஆள்மாறாட்டம்: ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 04:23 pm
impersonation-in-the-neet-exam

நீட் ஆள்மாறாட்டம் வழக்கில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மாணவன் முகமது இர்பானின் தந்தை முகமது ஷாபியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

திருப்பத்தூரை சேர்ந்த முகமது ஷாபி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "கடந்த 2019 ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கடந்த அக்டோபர் 2ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பாக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்தேன். ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது,மாணவன் முகமது இர்பான் நீட் தேர்வின் போது மொரீசியஸ்யில் இருந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது, எனவே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என கூறப்பட்டது. எனவே மாணவன் முகமது இர்பானின் தந்தை முகமது ஷாபியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close