கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க  நீதிமன்றம் உத்தரவு 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 05:49 pm
court-order-to-seal-kodaikanal-boat-club

கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கொடைக்கானலை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் தனது மனுவில், 8 சென்ட் நிலம் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் போட் கிளப்பினர் 10,000 சதுர அடியை பயன்படுத்தியதாகவும், போட்கிளப்பினர், தனியார் ஹோட்டலை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி படகுகளை இயக்குவதாகவும், நகராட்சிக்கு கட்டணம் ஏதும் செலுத்தாமல் படகுகளை இயக்குவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நடத்த வெளிப்படையான டெண்டர் அறிவிப்பு வெளியிடவும் கோரிக்கை ஆரோக்கியசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை,  கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்கவும், மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close