சென்னையில் 497 புள்ளிமான்கள் இறப்பு: வனத்துறை

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 10:39 pm
497-deer-deaths-in-chennai-forest

சென்னை நகருக்குள் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், ராஜ்பவன் போன்ற இடங்களில் உள்ள மான்களை இடமாற்ற தடை விதிக்கக்கோரி முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘சென்னை நகருக்குள் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் இறந்துள்ளன. நாய்கள் கடிப்பதாலும், வாகனங்கள் மோதுவதாலும் மான்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த மான்களின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. மான்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவே காப்புகாடுகளிலும் தேசிய பூங்காக்களிலும் விடப்படுகின்றன. சென்னையில் வனம் அல்லாத பகுதிகளில் உள்ள மான்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இடமாற்றம் செய்யப்படுகிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close