பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 10:15 am
prp-granite-company-dismisses-petition-seeking-permission-to-operate-quarry

பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் குவாரி இயக்க அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. 

பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும், மீண்டும் குவாரியை இயக்க அனுமதி கோரியும் பிஆர்.பி கிரானைட்ஸ் பங்குதாரர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதே கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளதை குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, குவாரியை இயக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close