டிச.2ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம்

  அனிதா   | Last Modified : 18 Nov, 2019 12:41 pm
local-election-notification-on-dec-2-state-election-commission

டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிச.2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிச.13ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொகுதி மறுவரையறை இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close