கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சட்டவிரோத பேனர், சுபஸ்ரீக்கு இழப்பீடு உள்ளிட்ட வழக்குகளுடன் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றுன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, விதிமீறல் பேனர் தொடர்பாக அடுத்த கட்ட அறிக்கை அளிக்க உத்தரவிட்டு ஜனவரி 6ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. விபக்குள்ளான இளம்பெண் ராஜஸ்வரியின் கால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in