டிசம்பர் 5ம் தேதி இருக்கு கச்சேரி! திமுகவின் மெகா திட்டம்!

  அனிதா   | Last Modified : 02 Dec, 2019 12:15 pm
local-election

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கு  டிச.5 ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை ஜன 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் கடந்த நவ. 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு டிசம்பர் 5 ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது.  அந்த மனுவில், தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  டிச.5 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close