10,000 கோடி செலவில் 8 வழிச்சாலை.. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

  அனிதா   | Last Modified : 03 Dec, 2019 12:18 pm
8-way-road-project-case

மத்திய அரசு 10ஆயிரம் கோடி செலவில் சென்னை –சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டிருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு, கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கபட்டது. மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது. சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திட்டத்தின் இயக்குனர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது . ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை  விசாரிக்கிறது.  விவசாய நிலங்கள் தப்புமா என்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close