• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

பேராசிரியை நிர்மலா தேவி கைது!

  SRK   | Last Modified : 16 Apr, 2018 08:52 pm


அருப்புக்கோட்டையில் மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்த முயற்சி செய்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சில கல்லூரி மாணவிகளை அவர்களது ஆசிரியையான நிர்மலா தேவி, சில உயர் அதிகாரிகளுடன் 'அனுசரித்து' செல்ல அழைப்பு விடுத்த ஆடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதுகுறித்து அவரை கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், வீடு பூட்டியிருந்ததால், கைது செய்யாமல் இருந்தனர். 

பூட்டிய வீட்டுக்குள் அவர் இருந்ததாக தெரிய வந்த நிலையில், பூட்டை உடைத்து, கைது செய்துள்ளனர். உடனடியாக விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள், யாருக்காக இவ்வாறு அவர் பேசினார், என்பதை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த விவகாரத்தில், தமிழக கல்வித்துறையின் மிக உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் நிர்மலா தேவி பேசியிருப்பதால், இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close