பெரம்பலூரில் சாலை அமைக்க நிதி; சச்சினுக்கு மக்கள் நன்றி 

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2018 07:20 am
sachin-tendulkar-sanctions-rs-21-7-lakhs-from-mp-fund-for-perambalur-road-work

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் தமிழகத்தின் சாலை பணிக்கு என ஒதுக்கிய நிதியைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவரை நியமன எம்.பி-யாக நியமனம் செய்தது முந்தைய காங்கிரஸ் அரசு. அவைக்கு அவர் அதிகம் வருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தநிலையில், சச்சின், தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21.7 லட்சத்தைப் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிக்கு ஒதுக்கியிருந்தார். 

இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், எளம்பலுார் ஊராட்சியில், 21.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. 3.75 மீட்டர் அகலத்திலும், 500 மீட்டர் நீளத்திலும், இரண்டு அடுக்காகத் தார் சாலை அமைத்து வருகின்றனர். சாலை அமைக்கும் பணியை, பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவும் ஆய்வு செய்தார். 

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் சாலை அமைக்க நிதி உதவி செய்திருப்பதற்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close