சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  சுஜாதா   | Last Modified : 13 Jul, 2018 06:51 am
commissioner-a-k-viswanathan-talks-about-cctv-camera

சென்னையில் தொடர்ந்து நடைபெறும் குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் சென்னை முழுவதும்  கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டு உள்ளோம் என்று  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மயிலாப்பூர் பகுதியில் இதுவரை 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சென்னை நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தில் உள்ளன. செப்டம்பர் மாதத்துக்குள் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுமையாக முடிந்துவிடும்.

பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களின் ஒத்துழைப்புடன் சென்னை முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டு உள்ளோம். இதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றவாளிகளையும் எளிதில் கண்டுபிடிக்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்போது ஒன்றிரண்டு கேமராக்கள், சாலையை கண்காணிக்கும்படி அமைக்க வேண்டும். வணிக நிறுவனங்களும் சாலையை பார்த்தபடி கேமராக்களை அமைக்க வேண்டும் என அரசு விதி உள்ளது. அதன்படியே அவர்கள் அமைக்கிறார்கள். யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

மாநகரம் முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணி ஒருபுறம் நடைபெறும் நிலையில், மற்றொரு புறம் போலீஸ் நிலையங்களை தூய்மையாக வைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பழைய வாகனம் எதுவும் இப்போது இல்லை. அதை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. உரிமையாளர்கள் இல்லாத வாகனங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close