கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி; ரூ.2 லட்சம் நிதியுதவி!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 02:26 pm
villupuram-school-student-dead-for-falling-in-septic-tank

விழுப்புரம் செஞ்சி அருகே பள்ளியில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் என்பவரது மகன் சிவராமன். செஞ்சியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் தற்போது கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கழிவுநீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. அங்கு சென்று மாணவன் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான்.

நீச்சல் தெரியாததால் 'காப்பற்றுங்கள்' என கூச்சலிட்டுள்ளான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான். மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து மாணவர் சிவராமன் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close