சேலம்: சுடுகாட்டின் அருகே உள்ள மக்களுக்கு மூச்சு திணறல்; சாலை மறியல் முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 11:18 am
salem-residents-near-a-cemetary-sick-due-to-fumes-protest-stopped

சுடுகாட்டு பகுதியில் பிணங்களை சரியாக எரியூட்டாததால் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வருவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.

சேலம் மாநகரம் ஐந்தாவது வார்டு மிட்டா புதூர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் நாள்தோறும் பிணங்களை எரித்து வருகின்றனர். பிணங்களை சரிவர எரிக்காததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அவர்களை அழகாபுரம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சார்பில் "மிட்டா புதூர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் பிணங்களை புதைப்பதற்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அதற்கு மாறாக பிணங்களை சரியாக எரிக்கவிடாமல் இருப்பதால் அதிக புகை குடியிருப்பு பகுதியில் இருக்க முடியவில்லை பகுதியில் தினமும் இரண்டு பிணங்கள் எரிக்கப்படுகிறது. எரிப்பதற்கு சரியான விறகு  உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாமல், டயர் போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் அதிக புகை வருகிறது. இதனால் சுவாச கோளாறு ஏற்படுகிறது, என குற்றம்சாட்டி உள்ளனர் . இந்த பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அருகில் இரண்டு மூன்று முக்கியமான பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படாத வண்ணம் அதில் அமைந்துள்ள சுடுகாட்டில் பிணங்களை புதைக்க மட்டும் அனுமதிக்க வேண்டும். எரிக்க அனுமதிக்கக்கூடாது," என தெரிவிக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close