திருச்சி: பூம்புகார் தீபாவளி ஆடை, ஆபரணக் கண்காட்சி

  டேவிட்   | Last Modified : 24 Oct, 2018 02:33 pm
deepavali-sale-by-poompuhar-at-trichy

தீபாவளிப் பண்டிகையையொட்டி, திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் நிறுவனம், தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பதோடு, விரும்பி வாங்கியும் செல்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பூம்புகார் நிறுவனம் தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அந்த வகையில், திருச்சி சிங்காரத்தோப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் 40 கிராம் அசாம் பட்டுப் புடவைகள், வாழ்நாள் பட்டுப்புடவைகள், சுங்கடிப் புடவைகள், ராஜஸ்தான் சுடிதார், ராஜஸ்தான் மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆடைகளும், ஆபரணங்களும் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. 

பொருட்கள் யாவும் ரூ.200 முதல் ரூ.8000 வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கண்டு ரசிப்பதோடு, 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதால், அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close