செல்போன் பேசியபடி மாநகர பேருந்துகளை இயக்கிய ஓட்டுனர்கள் சஸ்பெண்ட்

  டேவிட்   | Last Modified : 30 Oct, 2018 03:47 pm
50-mtc-drivers-suspended-in-chennai

சென்னையில் செல்போன் பேசியபடி அரசு மாநகர பேருந்துகளை இயக்கிய 50 ஓட்டுனர்களை மாநகர போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

சென்னையில் மாநகர பேருந்துகளை ஓட்டும் சில ஓட்டுநர்கள் பரபரப்பான சாலை போக்குவரத்துக்கு இடையில் பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசிக் கொண்டு செல்வதால், சாலையில் இருக்க வேண்டிய கவனம் சிதறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். 

இந்த குற்றச்சாட்டுகளில் மீது விசாரணை நடத்திய உயரதிகாரிகள் 50 ஓட்டுநர்களை பணியடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, இதே தவறை மீண்டும் செய்யும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close